Ads (728x90)

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 199 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 748066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35388 பேர் பலியாகியுள்ளனர் . இந்தியாவில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் டெல்லி நிசாமுதின் பகுதியில் மதம் சார்ந்த  மாநாடு நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 980 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று புதிதாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 57 பேர்களில் 50 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. 241 கொரோனா பாதிப்புகளை கொண்டு கேரளா அடுத்ததாக உள்ளது. கேரளாவில் இதுவரை 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென வேகமாக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget