Ads (728x90)

ஒருமித்த நாடு என்ற சொற்பதத்துக்குள் சமஷ்டி தீர்வை உருவாக்க முடியும் என்ற இந்த திருட்டுத்தனம் பற்றி நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். அதனாலேயே ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு. இந்த சொற்பதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோம். சம்பந்தர் அணியினரும், சஜித் அணியினரும் கூறும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தை ஏற்கமாட்டோம். அதுதான் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சொற்பதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியாவது இலக்கை அடைய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடாப்பிடியாக உள்ளனர்.

அதுதான் அவர்கள் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சஜித் அணியினரும் ஒத்தாசை புரிகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget