Ads (728x90)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலய உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை ஆலயத்திற்கு செல்லும் அடியார் கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

அத்தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து ஆலயத்திற்கு வருகை தர வேண் டும். அத்தோடு சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுதல் வேண்டும்.

பொலிசாரின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாள அட்டை மற்றும் அவர்களது முகம் கெமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் இம்முறை நல்லூர் உற்சவமானது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget