கொவிட்-19 தொற்றுக்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் தற்போது குணமடைந்துள்ளனர். அதே போன்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து சமூகத்திற்கு தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளிகளையும் திறப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கு கொவிட்-19 தொற்று சமூகத்திற்குள் பரவாமல் தடுப்பதே பிரதான இலக்காகும். எனவே சமூகத்தினுள் தொற்று ஏற்படுவதை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

Post a Comment