தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியல் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிரதேச சபை தவிசாளரும், பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது.
அவரது நியமனம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இடம்பெற்ற தேர்தலில் தேசிய கூட்டமைப்பு பின்னடைவைக் கண்டுள்ளது. அதேவேளை எமது கட்சி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன்.
குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பெறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன். எந்த விதத்திலும் இவ்வாறான அறிக்கைகள் விடுவது கட்சியின் கட்டுக்கோப்பிற்கும், விசுவாசத்திற்கும் எதிரானது. கட்சியினுடைய தலைமையிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
அந்தவகையில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம். இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் ஜனநாயக அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைவர் சம்மந்தன் ஜயாவை சந்தித்து மக்கள் எனக்கு ஆணை வழங்கவில்லை என்ற அடிப்படையிலே பொதுச் செயலாளர் பதவியை நான் துறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
இதற்கு அவர் உடனடியாக பல தேர்தல் கடமைகள் பொதுச்செயலாளருக்கு இருப்பதாகவும் இது தொடர்பாக எமது பொதுச்சபை தான் முடிவு எடுக்கவேண்டும் என்பதால் நீங்கள் பதவியை துறக்ககூடாது என கட்டளையிட்டதன் அடிப்படையில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன் என அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment