ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நாளை தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞானபத்தை நடைமுறைப்படுத்தி நாடு பூராகவும் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சகல இலங்கையர்களையும் சென்றடையும் வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பொதுத் தேர்தலில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை வழங்கிய குருணாகல் மாவட்ட மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment