Ads (728x90)

நடிகர் அக்‌ஷய் குமார் அஸ்ஸாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை அன்பளிப்பு செய்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த பெருமழையால் பிரம்ம புத்திரா வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இங்கு 30 மாவட்டங்களில் உள்ள சுமார் மூவாயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டார்கள். 80 போ் இறந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்மாநில மக்களுக்கு உதவும் விதமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் சா்வானந்த சோனோவால் டிவிட்டரில் அக்‌ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஏற்கனவே ரூபா 25 கோடி கொரோனா தடுப்பு நிதி வழங்கி இருந்தார். அவர் மேலும் ரூபா 03 கோடி மும்பை மாநகராட்சிக்கும், மும்பை போலீஸாருக்கு ரூபா 02 கோடியையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget