துபாயிலிருந்து 191 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளாகி இரண்டாக பிளந்தது.
இவ்விபத்தில் விமானி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40 பேர் காயமடைந்துள்ளனர். துபாயிலிருந்து கேரளா மாநில கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்-1344 விமானத்தில் 10 குழந்தைகள், 02 விமானிகள்,05 பணிப்பெண்கள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.
விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கியது. ஆனால் ஓடுதளத்தையும் தாண்டி விமானம் நிற்காமல் சென்று அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது. இதனால் விமானத்தின் முன்பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment