Ads (728x90)

50,177 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இன்று இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 38,760 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.


நியமனங்களை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.

ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை மத்திய நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது..

அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

இச்சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு நேரடி பங்களிப்பை வழங்குமாறு பட்டதாரிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget