இந்தியாவின் தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு நேற்று காலை யாழ். அரசடி சந்தியில் உள்ள அவரது திருவுருவச்சிலை முன்றலில் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
யாழ். இந்தியத் துணைத் தூதுவர் பாலச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னால்ட், முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் கவிஞரின் அபிமானிகள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
வவுனியாவிலும் மகாகவி பாரதியாரின் 99 வது நினைவு நாள் வவுனியா- குருமன்காடு பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் உபதலைவர சு.குமாரசாமி தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment