ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உண்மையை ஊக்குவித்தல், நீதி மற்றும் இழப்பீடுகள் மீளநிகழாமைக்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டிகிரெவ் நிலைமாற்றுக்கால நீதி விவகாரத்தினை இலங்கை கையாண்டுள்ள விதம் குறித்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்திடம் காணப்படும் அர்ப்பணிப்பின்மையை தவிர இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதி செயற்பாடுகளுக்கு வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிலைமாற்றுக்கால நீதி திட்டங்களை வடிவமைத்து முன்னெடுப்பதில் இலங்கை அரசாங்கம் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுள்ளதுடன் மாத்திரமின்றி இதுவரையில் அந்த செயற்பாட்டிற்கான முழு உரிமையை எடுக்கத்தவறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக காணப்படுகின்ற வழக்குகளை அரசாங்கம் உடனடியாக கையாளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment