Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவாகியுள்ளார்.

நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பிரதி தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த செயற்குழுக் கூட்டத்தில் பிரதி தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ருவன் விஜேவர்தன ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

குறித்த வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவுக்கு 28 வாக்குகளும், ரவி கருணாநாயக்கவிற்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக என்னை நியமித்தமைக்கான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு ருவான் விஜேவர்தன தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget