இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், மத்திய மாகாண ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் கண்டியிலுள்ள ஆளுநரின் வதிவிடத்தில் நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் உதவியாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ள போதிலும், மத்திய மாகாணத்திலுள்ள சுமார் 420 ஆசிரியர் உதவியாளர்கள் இன்னும் உரிய வகையில் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். பிரதிநிதிகள் அவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரை கேட்டுக்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் விரைவில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Post a Comment