குறைந்ந வருமானம் பெறும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்சமயத்திற்கு கவனத்தில் கொள்வதில்லை எனஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கடந்த 19 ஆம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 626 பேரும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும் , மன்னாரில் ஆயிரத்து 830 பேரும் , முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும், வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் என 13 ஆயிரத்து 540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.
தற்போது அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு வடக்கு கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேரிற்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 626 பேரிற்குப் பதிலாக 4 ஆயி்த்து 350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரிற்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேருக்கும், மன்னாரில் ஆயிரத்து 830 பேரிற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 530 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் ஆயிரத்து 565 பேரிற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 360 பேருக்கும், வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 20 பேரிற்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13 ஆயிரத்து 540 பேர் நியிமிக்க அனுமதிக்கப்பட்டபோதும் இந்த தொகையில் 4 ஆயிரத்து 230 பேரை நீக்கப்பட்டு, 9 ஆயிரத்து 210 பேரிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

Post a Comment