மணிவண்ணன் கட்சி தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும், கட்சிக் கொள்கைக்கு முரணாகவும், அவர் தேசிய அமைப்பாளர் பதவியையும், பேச்சாளர் பதவியையும் பயன்படுத்தினார் என மத்திய குழு தீர்மானத்திற்கு வந்தது. பின்னர் அவருக்கு எழுத்து மூலமாக . அவர் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக மத்திய குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டது
இரண்டு வாரங்களிற்குள் அவர் தன்னுடைய பதிலை மத்திய குழுவிற்கு அனுப்பி வைக்கலாம். உறுப்புரிமையை இடைநிறுத்தியதை நிரந்தரமாக கருதப்படாமலிருக்க அவரது நியாயங்களை முன்வைக்கலாம்.
இரண்டு வார அவகாசத்தின் பின்னர் ஒழுக்காற்று குழு நியமிக்கப்பட்டு, சாட்சியங்களுடன் அவர் மீதான குற்றப்பத்திரிகையில் ஆறு குற்றங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும். விசாரணையின் முடிவின் பிரகாரம் அவர் கட்சியில் தொடர்வதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் அவர் செயற்பட்டால், அது கட்சி சார்ந்து அல்லாமல் அது கட்சி விதியை மீறியதாகத்தான் கருதப்படும்.
நாங்கள் ஒரு அரசியல் இயக்கம். பெயரை முன்னிறுத்தி, முகத்தை முன்னிறுத்தி செயற்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்தன. நாங்கள் அதில் ஆதாரம் கிடைத்தவற்றிற்கு நடவடிக்கையெடுப்போம். ஒரு எல்லையை மீறியபோதுதான் மணிவண்ணன் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தோம். .
பதவி நீக்கப்பட்ட அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும், மத்திய குழுவின் தீர்மானத்தை அவர் கணக்கிலெடுக்கவில்லை என்ற தோரணையில் நடக்க முற்பட்டபோதே, அவரது உறுப்புரிமையை ஒழுக்காற்று குழுவின் ஊடாக நடவடிக்கையெடுத்தோம் என்றார்.

Post a Comment