Ads (728x90)


நேற்று மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்த 110 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,850 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,244 இலிருந்து 5,354 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,385 இலிருந்து 3,395 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget