Ads (728x90)

 


கடந்த 24 மணித்தியாலத்தில் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்துடன் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 120  பேர்  மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களாவர். மேலும் ஜப்பானிலிருந்து நாடு திரும்பிய மூவருக்கும், ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பிய  இரண்டு பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,811 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,341 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,457பேர் குணமடைந்தும், 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget