மேல் மாகாணத்தில் இன்று 29ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் தனிமைப்படுத்தல் சட்ட ஊரடங்கு உத்தரவு நவம்பர் 02ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் நுழைவதோ அல்லது அங்கிலிருந்து வெளியேறுவதோ கண்டிப்பாக தடை செய்யப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினரைத் தவிர வேறு எவரும், அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment