விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீடித்த பிரித்தானியா உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இந்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என வாதிடப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், பிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.
அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீடிக்க உள்துறை கவனத்தில் கொண்ட ஆதாரங்களும், காரணங்களும் போதுமானதாக இல்லை. பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடாத போதிலும் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உள்துறை கவனத்தில் கொள்ளவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment