நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று 445 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,933 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,419 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று கொரோனா தொற்று காரணமாக நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளது. இத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

Post a Comment