Ads (728x90)


தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுகொண்டுள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி இந்து மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. கொரோனா தொற்று நோயினால் இறப்புக்களும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இத்தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுள்ளார்.

இதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது இத்தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவோம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget