Ads (728x90)


நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் 'ஆன்டிஆக்சிடன்ட்' வைட்டமின் 'சி' சத்தில் உள்ளது. அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பழத்தினை உண்ணவும்.

அன்னாசி பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால் நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும்.

 அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் காக்கின்றது. மேலும் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது. நார்ச்சத்து உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்திற்கும் மிக மிக முக்கியம்.

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

 அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த  உதவுகின்றது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget