உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளரான நிமல் அபேசிறி ஆகியோர் இந்த ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் மற்றும் மானிட சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் மீள விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மூவரடங்கிய புதிய ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்திலான முன்னேற்றம் ஆகியன தொடர்பான 30/1 பிரேரணை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரேரணைகளுக்கு அப்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment