Ads (728x90)

கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த 09 பேரின் சடலங்கள் நேற்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டது

ஏறாவூரில் இருந்த இரண்டு ஜனாஸாக்களுடன் சேர்த்து காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்த 03 ஜனாஸாக்களும் , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்த 04 ஜனாஸாக்களும் என இதுவரை 09 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget