பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் இணைக்கப்பாடு ஏற்படாததன் காரணமாக எம்மால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனது. இவர்கள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. எவ்வாறாயினும் இந்த சம்பள விவகாரத்துக்கு தீர்வுக்கான வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.
அதனால் சம்பள நிர்ணய சபைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கமைய சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி 1,000 ரூபாய் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எமது அரசாங்கத்திலே வழங்கப்பட்ட வாக்குறுதியை நாம் எப்படியாவது நிறைவேற்றுவோம். கம்பனிகளுக்கு 99 சதவீதம் இலாபம் கிடைக்கும் வகையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்தோட்ட துறைகள் தொடர்பில் நாம் புதிதாக சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெருந்தோட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பெருமளவான நிலப்பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அந்த நிலங்களில் வீடுகளை அமைக்காது, இந்த பகுதிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தெரிவிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment