Ads (728x90)

இன்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சுக்கு 14 லட்சம் எஸ்ட்ரா ஸெனெக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.

இவற்றை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இந்தியாவின் மும்பையிலுள்ள சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget