விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மையின மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தையும், அதன் திட்டங்களையும் வடக்கு-கிழக்கு மக்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

Post a Comment