Ads (728x90)

இவ்வருட இறுதிக்குள் அனைவருக்கும் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை 100 சதவீதம் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மின் கட்டமைப்பில் 350 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் இம்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டம் 21 மாதங்களுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது உற்பத்தி செய்யப்படும் 220 மெகாவொட் மின்சாரம் மற்றும் 12 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ள இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 130 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

.

Post a Comment

Recent News

Recent Posts Widget