இவர் நாளை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
அஜித் நிவார்ட் கப்ரால் ஒரு சிரேஷ்ட பட்டய கணக்காளர் என்பதுடன், அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராகவும் சுமார் 09 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதோடு, அவரது இடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்கும் பரிந்துரையை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தேர்தல் செயலகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment