Ads (728x90)

கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாட்டிற்கு தீர்வு  காணப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட சிறுநீரக நோயாளிகள் இரத்த சுத்திகரிப்பு தேவைக்காக இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த நிலைமை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி றோட்டறிக் கழகம் அவுஸ்ரேலிய மருத்துவ நலச்சங்கத்தின் 1.9 கோடி ரூபா நிதி அனுசரணையில் 05 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்ட சிகிச்சை நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget