Ads (728x90)

இந்தியாவுடன் பெருமளவான கப்பல் பரிமாற்ற வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கம் போன்ற பரஸ்பர நன்மை அளிக்கும் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் இந்திய முதலீடு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்கமான தொடர்புகள் மேலும் வலுவடைய உதவும். இதன் பயனாக எமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளும் மேலும் வலுவடையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அயலுறவு கொள்கையின் பிரதான இலக்காக இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைகின்றது. பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பெறுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்க வேண்டியது இலங்கையினதும் அந்நாட்டு மக்களினதும் அறிவை சார்ந்தது.

பரஸ்பர நன்மை அளிக்கக்கூடிய எமது உறவுகளின் மீது நாம் முழுமையான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றோம் என்றும் இந்திய வெளியுறவு செயலர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம். 

இதன் காரணமாகவே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஐக்கிய இலங்கைக்குள் எமது நோக்கின் அடிப்படையில் இதன் மூலமாக பரந்ததும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஜனநாயக நாடாக இலங்கையின் பலத்துக்கு வலுச்சேர்க்கும் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget