இத்துடன் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள் மற்றும் கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் ஆகிய திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய யாழ். நகர குடிநீர் வழங்கல் திட்டம் ,நயினாதீவு நீர் வழங்கல் திட்டம் மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் என்பன உருவாக்கப்பட்டன.
நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 06 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5,000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர்.
இந்நிகழ்வில் கிராமிய பிரதேச குடிநீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, வடமாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வட மாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ். பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment