Ads (728x90)

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையதளம் மூலம் முற்பதிவு செய்ய வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முற்பதிவு செய்யாமல் அலுவலகங்களுக்கு வருகை தருபவர்கள் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகமும், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களும் அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சேவைகளை வழங்கும்.

எனவே அத்தியாவசிய தேவைகள் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கு வந்து தங்கள் சேவை தேவைகளை நிறைவு செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget