Ads (728x90)

வீடுகள் மற்றும் முகவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிவப்பு நிற முத்திரை இடப்படாத எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.

டிசெம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட நீல முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்களே இவ்வாறு மீளப்பெறப்படவுள்ளன.

இந்த உத்தரவின்படி தற்போது வீடுகள் மற்றும் முகவர்கள் வசம் உள்ள பழைய காலாவதியான நீல நிற பொலித்தீன் முத்திரையிடப்பட்ட சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிவப்பு நிற பொலித்தீன் முத்திரையிடப்பட்ட சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget