மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் நேற்றைய தினம் ஏல விற்பனை இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மன்னார் மற்றும் வௌிமாவட்டங்களிலிருந்து சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.
கடந்த 03 நாட்களாக இடம்பெற்ற ஏல விற்பனையில் 148 படகுகள் ஏலம் விடப்பட்டுள்ளதுடன் 57 இலட்சத்து 46 ஆயிரத்து 300 ரூபாவிற்கு இந்தப் படகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் இராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் மீனவ சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment