கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி பல்கலைக்கழகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை திறந்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.
வவுனியா பல்கலைக்கழகமானது, 1991 ஆம் ஆண்டு வட மாகாணத்தின் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, பின்னர் 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment