Ads (728x90)

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 06 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் மாலை 06 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget