பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை கோத்தபாய ராஜபக்ச நியமித்தமைக்கு பேராயர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே. அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல. தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வும் இதுவல்ல என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் தோற்கடிக்கப்பட்ட, மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை மக்கள் விரும்பவில்லை. மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் என ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
Post a Comment