Ads (728x90)

பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்தில் இடம்பெற வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவை அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அவசியமானவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று புதிய பிரதமர் சாதாரண பெரும்பான்மைக்கு அப்பால் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தினூடாக மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget