Ads (728x90)

இலங்கைக்கு தாம் நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் இலங்கை அதன் கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ப்யர் ஒலிவியர் கொவ்ரிஞ்சாஸ் கோரியுள்ளார்.

இலங்கையின் நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவலை கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொடுப்பனவு சமநிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போயுள்ளது. இதனால் அடிப்படைத் தேவைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. எனினும் சீனா உள்ளிட்ட கடனாளிகளுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget