நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேவேளை ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையை பழுதாக்க வேண்டாம். இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் ஒருவர் இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்த முடியாது.
எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment