Ads (728x90)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விக்ரமசிங்கவின் பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் எவ்வித சட்ட நெறிமுறையும் இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்காமல், உடனடியாக புதிய மக்கள் ஆணையுடன் சட்டப்பூர்வ நிலைமையை நாட்டில் ஏற்படுத்துமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget