Ads (728x90)

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி ஹனா சிங்கர் மற்றும் ஐ.நாவுக்கான ஆசிய அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் மைக் லன் உள்ளிட்ட ஆறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் கார் இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை டேவிட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget