Ads (728x90)

எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படாத நிலையில் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் கிட்டத்தட்ட 14 நாட்களாக தரித்து நிற்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் கப்பல்களுக்கு கிட்டத்தட்ட 150 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக எண்ணெய் கூட்டுத்தாபனம்  மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும், 100,000 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் ஏற்றிய ஒரு கப்பலும் துறைமுகத்துக்கு அருகில் தரித்துள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget