Ads (728x90)

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு அவசர உதவியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை இலங்கை மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த உதவி ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு நேரடி நிதியுதவியை விரிவுபடுத்தும், வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்குமெனவும் தெரிவித்துள்ளது.

இது சமூக பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துமென தெற்காசியாவுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட கல்வி நிபுணர் அசகோ மருயாமா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget