Ads (728x90)

அரச ஊழியர்களைப் போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற வேண்டும்.

சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிடப்படுபவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பிரதேச சபையில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச போக்குவரத்து சேவை நட்டமடைவத்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும். அரசியல்வாதிகள் தங்களின் சுய தேவைகளுக்காக அரச நிறுவனங்களை நட்டமடைய செய்துள்ளனர். அரசியல் நியமனங்களினால் இன்று அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் தற்போதைய நிலைக்கமைய மறுசீரமைக்கப்பட வேண்டும். ஆனால் தனியார் மயப்படுத்த கூடாது. அரச நிறுவனங்கள் நட்டமடைவதற்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும்,அரசியல் கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும். 

அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அரசியல்வாதிகள் முதலில் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget