அதுமட்டுமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும், நிலைபேறானதாகவும் அமைய வேண்டுமானால், அவை சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியுடனும் அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாகவும் அடிப்படை சட்டக்கட்டமைப்பு ஒன்றின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
எனவே அரசியலமைப்பிற்கு அமைவாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment