Ads (728x90)

தெற்காசியாவிலேயே அதிஉயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தாமரை கோபுரத்தின் கீழ் பகுதி 3 தளங்களைக் கொண்டுள்ளதுடன் குறித்த பகுதியில் டிஜிட்டல் திரையரங்கு, மாநாட்டு மண்டபம், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் திருமண நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஐந்தாவது மாடியில் சுழலும் ஹோட்டல் அமைந்துள்ளது.

ஆறாவது மாடியில் 6 சொகுசு அறைகள் கட்டப்பட்டுள்ளதுடன் ஏழாவது மாடி பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரே வாவிக்கு அருகில் அமைந்துள்ள 30,600 சதுர மீற்றர் உயரமான தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாணப் பணிகளுக்கு 113 மில்லியம் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தை வார நாட்களில் பிற்பகல் 02:00 மணி முதல் இரவு 11:00 மணி ம்  வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12:00 மணி முதல் இரவு 12:00 மணி வரையிலுபார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று கோபுரத்தை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச் சீட்டு 200 ரூபாய் ஆகும். வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget