10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கான ஒப்பந்த காலம், வேதனம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் உள்ளடக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்படவுள்ளன.
இலங்கைக்கான மலேசியத் தூதுவர் டான் யாங் தாய் உடனான சந்திப்பின்போது மலேசியாவில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment