உலக பட்டினி சுட்டெண் (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பசியை விரிவாக அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்குமான ஒரு கருவியாகும்.
இந்த வரிசையில் ஆசியாவில் பாகிஸ்தான் 99, வங்கதேசம் 84, நேபாளம் 81, இந்தியா 107 மற்றும் ஆப்கானிஸ்தான் 109 ஆவது இடத்திலும் உள்ளது.
இக்கணிப்பீட்டின்படி 2022 இல் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர் மற்றும் ஏமன் ஆகிய 5 நாடுகளில் பசி அபாயகரமான அளவில் உள்ளது. புருண்டி, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய 35 நாடுகளில் பசி தீவிரமானதாகக் கருதப்படுகிறது.
பசியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் உலகம் கடுமையான பின்னடைவை எதிர்கொள்கிறது. காலநிலை நெருக்கடி மற்றும் கொவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார விளைவுகள், உக்ரைனில் போர் பசியின் முக்கிய இயக்கிகள் என இச்சுட்டி தெரிவித்துள்ளது.
Post a Comment